இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான ‘பேங்க் ஆஃப் பரோடா’ ‘வெல்த் எக்ஸிகியூட்டிவ்’ மற்றும் ‘கிரெடிட் அனலிஸ்ட்’ ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 1,100 காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது CA முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். தேர்வு செய்யப்படும் நபர்களுக்குப் பதவிக்கு ஏற்ப மாதம் ரூ. 48,480 முதல் ரூ. 1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும்.
21 முதல் 33 வயதுக்குட்பட்ட தகுதியுடைய நபர்கள் அக்டோபர் 16, 2026-க்குள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, உளவியல் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
