வீடு கட்டுவோர் உஷார்..! சுவற்றில் பென்சில் பார்த்த வேலை… ஆத்தே ரூ.1 1/2 கோடி நாசமா போச்சு… இளைஞர் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ…!!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

பெரும்பாலும் மக்கள் சொந்தமாக தங்களின் கனவு வீடு கட்டுவதற்கு பல லட்சம் முதல் கோடிகள் வரை செலவழிக்கிறார்கள். ஆனால் சில இடங்களில் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டில் கட்டுமானத்தை தரம் இல்லாமல் கட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது .இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வீட்டின் தரம் மோசமாக உள்ளதாக வீட்டின் உரிமையாளர் கபீர் என்பவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 

   
View this post on Instagram

 

A post shared by TheViralNoidaManWithPencil&Hammer😜 (@kabeer.unfiltered)

அதில் வீட்டின் விலை மிகவும் அதிகம். ஆனால் கட்டுமானத்தின் தரம் மிகவும் மோசம். பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் பென்சிலை வைத்து ஓட்டை போடும் அளவிற்கு வீட்டின் தரம் மோசமாக உள்ளது என்று கூறி சுத்தியலை வைத்து அடித்து பென்சிலால் ஓட்டை போட்டு காட்டுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த இணையவாசிகள் வீடு காட்டும் போது கட்டுமான பணிகளை உடனிருந்து கவனிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.