ரத்த வெள்ளத்தில் 80 வயது மூதாட்டி…. தாத்தா செய்யுற காரியமா இது…? பதறிய அக்கம் பக்கத்தினர்… வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 13, 2025

Spread the love

கோவை மாவட்டம் வளையபாளையத்தில் 80 வயது அருக்காணி அம்மாள் தனியாக வசித்து வந்தார். கணவர் கருப்பசாமி, மூன்று மகள்கள், ஒரு மகன் இருந்தும் அவர் தனிமையில் இருந்தார். வாரிசுகள் அவ்வப்போது மட்டும் வந்து செல்வார்கள். கடந்த இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால், நேற்று துர்நாற்றம் வந்தது. அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து கருமத்தம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது அருக்காணி இறந்து கிடந்தார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 65 வயது கோபால் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அருக்காணி அணிந்திருந்த ஒரு பவுன் தங்க மோதிரத்திற்காக இந்தக் கொலை நடந்தது. போலீசார் கோபாலை கைது செய்து மோதிரத்தை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.