நோய்வாய்ப்பட்ட மகளால் மனமுடைந்த தாய்… விரக்தியில் எடுத்த அதிர்ச்சி முடிவு… ஒரேநாளில் பறிபோன 2 உயிர்கள்…!!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

கேரள மாநிலம் மலப்புரம் எடப்பால் அருகே உள்ள கண்டணகம் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா குமாரி (57) . இவருடைய மகள் அஞ்சனா (27 ). அனிதா குமாரிக்கு ஒரு  மகனும் உள்ளார் . கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் அனுதா குமாரியின் கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு அவர் தன்னுடைய மகளை கவனித்து வந்துள்ளார். இதற்கிடையில் அஞ்சனா முதுகு தண்டுவட நோய் பாதிப்பு காரணமாக  படுத்தப் படுக்கையையாக இருந்தார். இந்த நிலையில் நேற்று அனிதா குமாரியின் மகன் வழக்கம் போல வேலைக்கு சென்றார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த அனிதா குமாரி தன்னுடைய மகளின் நிலை  நினைத்து மனமுடைந்து காணப்பட்டுள்ளார். பின்னர் மகளை கொலை செய்து முடிவு செய்த அவர் அஞ்சனாவை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்க வைத்து கொலை செய்துள்ளார். பிறகு அவரும் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர்  தாய் மற்றும் மகள் ஆகிய இரண்டு பேரின் சடலங்களை  மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். விசாரணையில் நோய் பாதிப்பால் தன்னுடைய மகளின் நிலையை கண்டு மனமுடைந்த தாய் மகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.