திருச்சியில், தவெக தொண்டர்களின் வெள்ளத்தில் விஜய் தனது தேர்தல் பரப்புரையை நேற்று தொடங்கினார். திருச்சி ஏர்போர்ட் வந்தடைந்த அவருக்கு, அங்கு முதல் மரக்கடை MGR சிலை வரை தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 9 கி.மீ தூரத்தை 5 மணி நேரமாக கடந்து வந்த விஜய், திரளான தொண்டர்களுக்கு மத்தியில் 2026 தேர்தலுக்காக தனது பரப்புரையை மேற்கொண்டார். திருச்சியில் முடித்துவிட்டு அரியலூர் பரப்புரை மேற்கொண்டார்.
திருச்சியை பரப்புரையின்போது திமுக அரசை கடுமையாக சாட்டியிருந்தார் விஜய். இந்நிலையில் திமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று TVK தலைவர் விஜயின் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டை மக்கள் ஏற்க மாட்டார்கள். திருச்சியின் வளர்ச்சி பணிகளை அவர் சரியாக பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.
