BREAKING: திடீர் மனமாற்றம்..! முடிவை மாற்றிய செங்கோட்டையன்… அதிமுகவில் அடுத்த பரபரப்பு..!!

By Soundarya on புரட்டாதி 14, 2025

Spread the love

அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன. அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்சாவை நேரில் சந்தித்து பேசியதாக கூறி இருந்தார். அதேசமயம் செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்பது அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்

இந்நிலையில் தன்னை கட்சியிலிருந்து நீக்கினால் கூட அமைதியாக இருப்பேன் என செங்கோட்டையன் கூறியுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடப்பாடிக்கு விடுத்த 10 நாள்கள் கெடு நாளையுடன் நிறைவடையும் நிலையில் நிலையில், தன்னை நீக்கினாலும் அமைதியாக இருப்பேன் என கூறுவதன் மூலம் மனம் மாறிவிட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.