HDFC வங்கி சேவைகள் முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் சோசியல் மீடியாவில் புலம்பி வருகின்றனர். வங்கி சேவை மட்டுமல்லாமல் UPI பரிவர்த்தனையும் தடைபட்டுள்ளது. வார விடுமுறை நாளான இன்று காலையிலேயே Server down என்பதால் கடைகளுக்குச் சென்ற பலரும் UPI மூலம் பணம் செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். நாட்டின் பல இடங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
