சமைக்கும்போது சில சமயம் கைத்தறி பொருட்கள் கீழே விழுவது சகஜம்தான். அதுபோல எண்ணெய் கீழ ஊத்திட்டா என்ன பண்ணனும், எப்படி சுத்தம் பண்ணனும்னு பாக்கலாம். சமைக்கிறது கூட சுலபம்தான் ஆனா அந்த பாத்திரத்தையும், கிச்சனையும் கிளீன் பண்றது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம். சிம்பிளா சில ட்ரிக்குகள் செஞ்சாலே போதும் சீக்கிரமா கிச்சனை கிளீன் பண்ணிடலாம். பொதுவாகவே தரையில எண்ணெய் கொட்டிட்டா முதல்ல கையில எடுக்க ட்ரை பண்ணுவோம் அப்புறம் ஏதாவது துணி வைத்து துடைப்போம்.
இனி இதுபோல செய்யாம வீட்ல இருக்க சால்ட் உப்பு மட்டும் கையில எடுத்துக்கோங்க. எண்ணெய் கொட்டின இடத்தில தூள் உப்பு ஃபுல்லா தூவி விடுங்க. கொஞ்ச நேரத்துல எண்ணெய உப்பு ஃபுல்லா உறிஞ்சிடும் அதுக்கப்புறம் ஒரு துணி இல்லனா டிஷ்யூ பேப்பரை வச்சி சுலபமா தொடச்சி எடுத்துடலாம். எடுக்குறதுக்கு முன்னாடி அந்த உப்பை நல்ல கீழ தரையில தேச்சி விட்டு எடுத்தோம்னா சுத்தமா வந்துரும். கிளீன் பண்ணதுக்கு அப்புறம் பார்த்தா தரையில எண்ணெய் ஊத்துன தடையுமே இருக்காது. அந்த இடத்தில் கால் வைத்தால் கூட வழுக்காது. இனி வீட்டில் தரையில் எண்ணெய் ஊற்றினால் பதட்டப்படாமல் இது போன்று செய்து பாருங்கள்.
