சோகம்..! இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மறைவு… அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்…!!

By Soundarya on மார்கழி 17, 2025

Spread the love

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் சிறந்த லெக் ஸ்பின்னரான சோமச்சந்திர டி சில்வா தனது 83-வது வயதில் காலமானார். இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த இவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1982-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இலங்கை பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.

இலங்கை அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் (SLC) தலைவராகப் பணியாற்றி அந்நாட்டு கிரிக்கெட் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார்.