மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்களுக்கு மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் (PF) பணத்தை இனி வங்கி ATM மற்றும் UPI மூலம் நேரடியாக எடுக்கும் புதிய வசதி 2026 மார்ச் மாதத்திற்குள் அமல்படுத்தப்பட உள்ளது. ஒருவரது EPF கணக்குடன் வங்கி கணக்கு முறையாக இணைக்கப்பட்டிருந்தால், அவசரத் தேவைகளுக்காகத் தனது கணக்கில் உள்ள தொகையில் 75% வரை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது பிஎஃப் பணம் எடுப்பதற்குப் பின்பற்றப்படும் சிக்கலான படிவங்கள் மற்றும் நீண்ட காலத் தாமதங்கள் குறைக்கப்பட்டு, நடைமுறைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு எளிமையாக்கப்படுகின்றன இதற்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தனது தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை (IT infrastructure) மேம்படுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வசதி நடைமுறைக்கு வரும்போது, அவசர மருத்துவத் தேவைகள் அல்லது இதர செலவுகளுக்காகப் பிஎஃப் பணத்தைப் பெற மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை மாறும்.
