9 வயதில் பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய அரண்மனை பட சிறுமி… வைரலாகும் போட்டோஸ்..!!

By Priya Ram on ஜூலை 30, 2024

Spread the love

தேவ நந்தா கடந்த 2019-ஆம் ஆண்டு ரிலீசான தோட்டப்பண் என்ற திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு மை சாண்டா, மின்னல் முரளி, ஹவன், தி டீச்சர் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு மாலிகாபுரம் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

   

இந்த திரைப்படத்தில் தேவ நந்தாவின் நடிப்பு அற்புதமாக இருக்கும்.தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ரிலீசான அரண்மனை 4 திரைப்படத்தில் தமன்னாவின் மகளாக தேவ நந்தா நடித்துள்ளார். தனது இயல்பான நடிப்பால் தேவ நந்தா ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். ஆண்டுக்கு 5 படங்களுக்கும் விடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

 

தேவ நந்தா தற்போது மலையாளத்தில் கு என்கிற திரைப்படத்திலும், தெலுங்கில் பாக் என்ற திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்போது தேவ நந்தாவுக்கு 9 வயது ஆகிறது. இவரது தந்தை ஜுபின் ஒரு தொழிலதிபர். தாய் பிரீத்தா அரசு துறையில் வேலை பார்க்கிறார்.

நடிப்பு மட்டுமில்லாமல் பரதநாட்டியம், நீச்சல், பியானோ ஆகியவற்றையும் தேவ நந்தா கற்றுக் கொள்கிறார். இந்த நிலையில் தேவ நந்தா 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளார். தேவ நந்தா இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.