வசூலில் சக்கப்போடு போடும் ராயன்.. உலக அளவில் இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா..?

By Mahalakshmi on ஆடி 30, 2024

Spread the love

உலக அளவில் நான்கு நாட்களில் ராயன் திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்தது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்த தனுஷ் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து அதிலும் சாதித்து காட்டி இருக்கின்றார். பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான தனுஷ் அதைத்தொடர்ந்து ராயன் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

   

தனுஷின் 50-வது திரைப்படமான இப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.  இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.

 

படம் வெளியானது முதலே நல்ல விமர்சனங்களையும் வசூல் ரீதியாகவும் சாதனை செய்து வருகின்றது. அப்பா அம்மா இல்லாத ஒரு குடும்பத்தில் அண்ணன் தனுஷ் தம்பிகளான சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் தங்கை துஷாரா விஜயன் ஆகியோரை வளர்த்து வருகின்றார். அந்த குடும்பத்திற்கு எதிராக வரும் பிரச்சனையை முன் நின்று எதிர்த்து போராடி அதில் வெற்றி பெறுகின்றார்.

இதை கதையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இதுவரை தனுஷ் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு இந்த திரைப்படத்திற்கு கிடைத்திருக்கின்றது. மேலும் ராயன் திரைப்படம் வெளிவந்து நான்கு நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை உலக அளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. அதன் படி இந்த திரைப்படம் 4 நாட்களில் உலக அளவில் ரூபாய் 82 கோடி மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து இருக்கின்றது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.