விருது மேடையில் திடீரென தோன்றிய விவேக்.. “அவரு டெய்லி வந்துருவாரு”.. எமோஷனலான விவேக்கின் மனைவி..!!

By Priya Ram on ஜூலை 30, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் சரிக்கு சமமாக பேசக்கூடிய நடிகர் விவேக் தான். அந்த அளவுக்கு அவர் விவேக்கிற்கு உரிமை கொடுத்துள்ளார். ஒரு சில கதைகள் தொடர்பான விமர்சனங்களை கூட பாலச்சந்தர் விவேக்கிடம் கேட்பாராம். தனது நகைச்சுவை வழியாக மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூற வேண்டும் என நினைப்பவர் விவேக். அப்துல் கலாமின் தீவிர ரசிகரான விவேக் அவரது கனவுகளையும் நிறைவேற்ற நினைத்தார்.

   

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2021-ஆம் ஆண்டு விவேக் உயிரிழந்தார். இந்த நிலையில் கே.பாலச்சந்தர் பெயரில் அவரது சீடரான விவேக்கிற்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விவேக் இல்லாததால் அவருக்கு பதிலாக அவரது மனைவி அருட்செல்வி விருதினை வாங்க வந்தார். அப்போது நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் விவேக்கை வைத்து வி.ஆர் வீடியோ ஒன்றை தயாரித்துள்ளனர்.

   

 

அதில் பேசிய விவேக் நான் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நமது மகளின் திருமணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தினீர்கள். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் சிரிப்பின் வழியாக நானும் உங்களோடு வாழ்கிறேன். Don’t worry be happy என கூறினார். அதனை பார்த்ததும் விவேக்கின் மனைவி எமோஷனல் ஆகிவிட்டார். மேடையில் இருந்த சித்தார்த்தம் கீழ அமர்ந்திருந்த பிற கலைஞர்களும் கண்கலங்கினர். பின்னர் விவேக் மனைவி பேசும்போது என் கணவர் டெய்லி வந்துருவாரு. ஒரு முக்கியமான முடிவை எடுக்க போகிறோம் என்றால் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை எனக்கு காட்டி விடுவார்.

அவர் உடன் இருந்த நினைவுகளை பற்றி பேசினால் சந்தோஷமாகத்தான் இருக்கும். குருவான கே பாலச்சந்தர் பெயரில் சீடரான எனது கணவருக்கு விருது வழங்குவது மிக்க மகிழ்ச்சி. சுமார் 36 ஆண்டுகள் என் கணவர் சினிமா துறையில் வேலை பார்த்துள்ளார். அவர் 400 படங்களில் நடித்துள்ளார். இது சாதாரண விஷயம் கிடையாது. என் கணவரை படங்களில் காண்பித்த இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும், பெஹின்ட்வுட் நிகழ்ச்சிக்கும் நன்றி என கூறியுள்ளார்