முன்னணி நடிகரான விஜயகுமாரின் பேரனும், ஆகாஷ் வனிதா தம்பதியினரின் மகனுமான ஸ்ரீஹரி ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். அவர் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீ ஹரிக்கு ஜோடியாக பிரபு சாலமனின் மகள் நடிக்கிறார். இந்த படத்திற்கு மாம்போ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. சிறுவயதில் இருந்து ஸ்ரீஹரி தனது அப்பா ஆகாஷ் உடன் தான் வளர்கிறார். அவருக்கும் வனிதா விஜயகுமாருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என்று தான் கூறப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/P5woKwJKgszLYyHtflLx.jpg)
சமீபத்தில் வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஸ்ரீஹரி விஷயத்துல என்னுடைய எமோஷன்ஸ் எல்லாத்தையும் ரொம்ப நாளா கட்டுப்படுத்தி வைத்திருந்தேன். ஆனா அது உடைஞ்சு போச்சு. தான் ஆடலனாலும் தான் சதை ஆடும்னு சொல்லுவாங்க. ரொம்ப நாளைக்கு அப்புறம் நேத்து தான் அத நான் உணர்ந்தேன். அது மிகப்பெரிய ஹேப்பி மொமென்ட். இவ்ளோ பெரிய மேடை ஸ்ரீஹரிக்கு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல.

ஒரு நல்ல ப்ரோடக்ஷன் ஹவுஸ். பிரபு சாலமன் சார் மாதிரி ஒரு நல்ல டைரக்டர் கிடைச்சிருக்காரு. படத்துல அவன் ஒரு பெரிய சிங்கத்தோட நடிக்கிறானாம். சிங்கத்தோட ட்ரெய்னிங் பண்றது நினைச்சாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஒரு கோடி கொடுத்தாலும் என்னால சிங்கத்து கிட்ட போக முடியுமான்னு தெரியல. நான் அப்படி நடிக்க மாட்டேன். ஆனா அவன் நடிக்கிறான். எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு என ஓப்பனாக பேசி உள்ளார்.

