சீனாவின் ஷாங்காய் நகரத்தில் இருந்தபடி, சுமார் 5,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஷ்கர் (Kashgar) நகரில் இருந்த நோயாளிக்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஷாங்காய் செஸ்ட் மருத்துவமனையின் (Shanghai Chest Hospital) நிபுணர் லூவோ கிங்குவேன் (Luo Qingquan), சீனாவிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி அறுவை சிகிச்சை ரோபோவைப் பயன்படுத்தி இந்த மைல்கல்லை எட்டினார். நுரையீரலில் இருந்த கட்டியை அகற்றும் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை, 5ஜி தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
A surgeon in China performed surgery on a patient in Kashgar city,
5000 kilometers away, while sitting in Shanghai, using a China made 5G surgical robot.
The entire surgery was completed in one hour.
In India, efforts are still ongoing to treat with cow dung and cow urine. pic.twitter.com/Rzt1XfIhx7
— AmbedkariteIND (@AmbedkariteLk) January 7, 2026
தொலைதூரப் பகுதிகளில் உள்ள நோயாளிகள் உயர்தர மருத்துவ வசதிகளைத் தங்கள் இருப்பிடத்திலேயே பெற முடியும் என்பதை இந்தத் தொழில்நுட்பம் நிரூபித்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதேபோன்ற 5,000 கி.மீ தூர அறுவை சிகிச்சையைச் சீனா மேற்கொண்டு, நிலப்பரப்பு சார்ந்த 5ஜி நெட்வொர்க் தடைகளையும் தகர்த்துள்ளது.
