அதிமுக கூட்டணியில் பாமக நேற்று இணைந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றடைந்தார். தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக இபிஎஸ் டெல்லி புறப்பட்டு சென்றார். திமுக அரசு மீதான ஊழல் புகார் பட்டியலை ஈபிஎஸ் அவரிடம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொகுதி பங்கீடு குறித்து பாஜக தலைவர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலையும் சந்திப்பதற்கு அவர் திட்டமிட்டு உள்ளார். முன்னதாக டெல்லி சென்ற பிறகு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இபிஎஸ், அமித்சாவை சந்திக்க டெல்லி போறேன், தெளிவா முகத்தை காட்டிட்டு தான் வருவேன், போன தடவை மாதிரி போட்டு விட்டுறாதீங்க என்று கூறிவிட்டு சென்றார்.
தெளிவா முகத்த காட்டிட்டு தான் வருவேன். போன தடவ மாதிரி போட்டு விட்டுறாதிங்க – @EPSTamilNadu pic.twitter.com/mbEARNnRoG
— Vignesh Theni (@Vignesh_twitz) January 7, 2026
