ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மான்யம் மாவட்டம் அனசபத்ராவில் உள்ள ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளியில் பயின்று வந்த 7-ஆம் வகுப்பு மாணவன் சாவொர் அர்பித், திடீரென நினைவு தப்பிய நிலையில் கண்டெடுக்கப்பட்டான். பள்ளி நிர்வாகம் உடனடியாக அவனை மீட்டு சிகிச்சைக்காக தோக்கிசீலி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவசர அவசரமாக அழைத்துச் சென்றது.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பார்வதிபுரம் மருத்துவமனைக்கு அந்த மாணவன் மாற்றம் செய்யப்பட்டான். எனினும், வழியிலேயே மாணவனின் உயிர் பிரிந்துவிட்டதாக அவனை பரிசோதித்த மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்தத் தகவலை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவனின் உடலைப் பார்த்து கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
https://twitter.com/Telugufeedsite/status/2100520847547257275/video/1
மாணவனின் இந்தச் சந்தேகத்திற்குரிய மரணம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், வழக்கைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…