“அண்ணன் என்கிட்ட தப்பா நடக்குறாரு” அம்மாவும் இதுக்கு உடந்தை… கதறிய 23 வயது இளம்பெண்… வெளியான பகீர் பின்னணி..!!

By Soundarya on தை 24, 2026

Spread the love

கான்பூரின் கல்யாண்பூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டிலிருந்து தப்பித்து காவல் நிலையத்திற்குத் தஞ்சம் புகுந்துள்ளார். தனது மூத்த சகோதரர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக அவர் புகாரளித்தார். மேலும், தனது தாயும் இதற்கு உடந்தையாக இருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

ஆரம்பத்தில் காவல்துறையினர் இப்புகாரைச் சந்தேகத்துடன் அணுகினாலும், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆதாரங்கள் அந்தப் பெண்ணின் குமுறலை உறுதிப்படுத்தின. இதையடுத்து, உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர் அந்தப் பாலியல் குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இக்குற்றத்திற்குத் துணை நின்ற தாயார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.