சபாஷ்.! “கல்யாணம் பண்ணலனா கொன்னுடுவாங்க” ஆனால் நான் படிச்சு சொந்த காலில் நிக்கணும்… தந்தையிடமிருந்து தப்பித்து ஓடிய மாணவியின் துணிச்சல் முடிவு..!!

By Soundarya on தை 24, 2026

Spread the love

காதலித்து காதலனோடு ஓடிப்போகும் சமூகத்திற்கு மத்தியில், தனது படிப்பைத் தொடரவும், சொந்தக் காலில் நிற்கவும் வீட்டை விட்டு வெளியேறி ஆச்சரியப்படுத்தியுள்ளார் 21 வயது பி.எட் மாணவி அனுஷ்கா திவாரி. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் எந்த இளைஞனுடனும் ஓடிப்போகவில்லை என்றும், தனது தந்தை தன்னை வலுக்கட்டாயமாகத் திருமண பந்தத்தில் தள்ள முயற்சிப்பதால், அதற்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் விளக்கியுள்ளார். திருமணத்தை மறுத்தால் தந்தை தன்னைக் கொன்றுவிடுவார் என்ற பயமே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தன்னிறைவு பெற்ற பெண்ணாக மாற விரும்புவதாகவும், கல்வியைத் தொடர்ந்து சுதந்திரமாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ள அனுஷ்காவின் இந்த வீடியோ, சமூகத்தில் பெண்களுக்கு எதிராகத் திணிக்கப்படும் கட்டாயத் திருமணங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளது. தனது கனவுகளை நனவாக்க ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது பலரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.