பூமியைச் சுற்றப்போகும் 17 லட்சம் ஆபத்துகள்… விண்வெளியில் நடக்கப்போகும் ‘அந்த’ பயங்கரம்… இனி நட்சத்திரங்களை பார்க்கவே முடியாதா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட பகிர் அறிக்கை …!

By Visaka on ஆடி 3, 2026

Spread the love

விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு வானியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உலக நாடுகளும் தனியார் நிறுவனங்களும் அதிவேக இணைய சேவை மற்றும் பிற தேவைகளுக்காக ‘மெகா கான்ஸ்டலேஷன் திட்டங்கள் மூலம் 10 லட்சம் முதல் 17 லட்சம் வரையிலான செயற்கைக்கோள்களை பூமியின் குறைந்த உயர சுற்றுப்பாதையில் ஏவ திட்டமிட்டு வருகின்றன. தற்போது சுமார் 14,000 செயல்பாட்டு செயற்கைக்கோள்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்தால் இரவு வானின் இயற்கை அழகு முற்றிலும் சிதைந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த பிரம்மாண்ட செயற்கைக்கோள் கூட்டமைப்புகள் சூரிய ஒளியை அதிகளவில் பிரதிபலிப்பதால், இரவு நேர வானில் செயற்கையான ஒளி மாசுபாடு ஏற்படும். இதன் விளைவாக, சூரியன் மறைந்த பிறகும் வானம் போதிய இருளைப் பெறாமல், வெறும் கண்களால் நட்சத்திரங்களைப் பார்க்கும் வாய்ப்பை மனிதர்கள் இழக்க நேரிடும். மேலும், விண்வெளியை நோக்கிச் செய்யப்படும் அதிநவீன தொலைநோக்கி ஆய்வுகளும், ஆழமான விண்வெளி ஆராய்ச்சிகளும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

   

செயற்கைக்கோள்களின் பெருக்கத்தால் ஏற்படும் மற்றொரு ஆபத்து “கெஸ்லர் சிண்ட்ரோம்” எனப்படும் சங்கிலித் தொடர் விண்வெளி மோதல் அபாயமாகும். விண்வெளியில் நெரிசல் அதிகரிக்கும் போது, ஒரு செயற்கைக்கோள் மற்றொன்றுடன் மோதி பல லட்சம் சிறிய விண்வெளிக் குப்பைகளை (Space Debris) உருவாக்கும். அதிவேகத்தில் பயணிக்கும் இந்த குப்பைகள், பிற விண்கலன்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) தாக்கிச் சேதப்படுத்தும் ஆபத்து உள்ளதால், வருங்கால விண்வெளிப் பயணங்களுக்கும், மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சிக்கும் இது ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.