ஆதார் கார்டில் புதிய இமெயில் அப்டேட்… இனி எல்லாமே ஃப்ரீ…! எப்படி தெரியுமா…? UIDAI அதிரடி அறிவிப்பு…!!

By Swetha on ஆடி 3, 2026

Spread the love

இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் ஆதார் சேவை மையங்களுக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே தங்களது இமெயில் முகவரியை ‘ஆதார் செயலி’ மூலம் எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளும் புதிய வசதியை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் தொடங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது மின்னஞ்சலைப் புதுப்பித்துள்ளதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு தளங்களிலும் கிடைக்கும் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, இமெயில் முகவரியை எளிதாக மாற்றலாம். இதற்கு முதலில் செயலியில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். பின்னர், முகப்பு பக்கத்தில் உள்ள ‘Service’ என்ற பிரிவில் ‘Email Add/Update’ என்பதைத் தேர்வு செய்து, புதிய இமெயில் ஐடியை உள்ளிட வேண்டும். தொடர்ந்து, அந்த இமெயில் முகவரிக்கு வரும் OTP-யை பதிவிட்டு, முக அங்கீகாரத்தை முடித்தால் இமெயில் முகவரி வெற்றிகரமாக அப்டேட் செய்யப்பட்டுவிடும்.

   

இதற்கு முன்னதாக ஆதாரில் முகவரி, மொபைல் எண் போன்றவற்றை மாற்றுவதற்கு 75 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருந்த நிலையில், இந்த புதிய இமெயில் அப்டேட் வசதியை ஜூலை 1 முதல் முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. பொதுமக்கள் எந்தவித கட்டணமும் இன்றி தங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே வீட்டிலிருந்தபடியே இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.