தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளன. அதன் வெளிப்பாடாக நேற்று செங்கோட்டையன் இபிஎஸ் முன்பு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தார்.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என ஈபிஎஸ்-க்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். தற்போது இன்று காலை 10.30 மணிக்கு டிடிவி தினகரன் தனது நிலைப்பாட்டை அறிவிக்கின்றார். மதுரையில் மூக்கையா தேவரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தனியார் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. NDA கூட்டணியில் இருந்து விலகியது குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளார்.
