கேரளா மாநிலம் காசர்கோட்டையை சேர்ந்த சந்தீப்குமார் (27). கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்புராவுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு பைந்துரை சேர்ந்த அப்துல் சபத் (28) என்பவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவர் மூலமாக குந்தாப்புறாவை சேர்ந்த அஸ்மா (48) என்பவருடன் அறிமுகம் வந்துள்ளது. கடந்த இரண்டாம் தேதி அஸ்மா சந்தீப்குமாரை தொடர்பு கொண்டு உல்லாசமாக இருப்பதற்கு அழைத்துள்ளார்.
அஸ்மாவின் ஆசை வார்த்தைக்கு மயங்கி சந்தீப்குமாரும் வந்துள்ளார். பின்பு ஏதோ ஒரு வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருக்கலாம் என கூறி அஸ்மா சந்தீப்குமாரை கூட்டிச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அஸ்மா, அப்துல் சவத் உள்ளிட்ட ஆறு கூட்டாளிகளும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 3 லட்சம் சந்தீப்குமார் இடம் கேட்டு உள்ளனர். சட்டை பையில் இருந்த ரூபாய் 6200-யை பறித்துக் கொண்டு, பின்பு கூகுள் பே மூலம் மூன்று தவணையாக ரூபாய் 35 ஆயிரம் வரை பரிமாற்றம் செய்துள்ளனர். ஏடிஎம் கார்டை பறித்துக் கொண்டு, ஏடிஎம் பின் நம்பரை கேட்டு தெரிந்து கொண்டு ரூபாய் 40 ஆயிரத்தையும் எடுத்துள்ளனர்.
இரவு 11 மணி அளவில் தான் சந்தீப் குமாரை விட்டுள்ளனர். சந்தீப் போலீசில் புகார் அளித்துள்ளார். கொலை மிரட்டல் மற்றும் பணத்தை பறித்ததுக்கு வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து ஆறு பேரையும் கைது செய்தனர். பின்பு விசாரணை முடிந்தவுடன் ஆறு பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
