விஜயகாந்தின் நிறைவேறாத ஆசை.. புது வீட்டில் குடியேறாமலே மறைந்த கேப்டன்… அந்த பிரம்மாண்ட வீட்டினை பாத்துருக்கீங்களா..?

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். தனது ரசிகர்களால் ‘கேப்டன்’ என்று கொண்டாடப்பட்டவர் .அரசியலிலும் சரி , சினிமாவிலும் சரி கால் பதித்து கலக்கிய இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு சில ஆண்டுகளாக வே உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வைரலானது .இதைத் தொடர்ந்து நேற்று அவருக்கு கொரோனா இருப்பதாக கூறி,  திடீரென நடிகர் விஜயகாந்த் மரணம் அடைந்து விட்டார் என்ற மருத்துவமனை அறிக்கை வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

தற்பொழுது ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும், அவரது தொண்டர்களும் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 4.30 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயகாந்தின் உடல் தற்பொழுது பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நபர் பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013ம் ஆண்டு முதல்  வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த வீட்டின் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடக்காமல் இருந்த நிலையில் தற்போது தான் மீண்டும் வேலைகள் தொடங்கியிருக்கிறது. 90% வேலைகள் முடிவடைந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த வீட்டில் பால் காய்ச்சப்பட்டதாகவும் இவ்விழாவில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. 10 ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த வீட்டில் குடியேறாமலேயே விஜயகாந்த் அவர்களின் உயிர் பிரிந்து விட்டது. தற்பொழுது நடிகர் விஜயகாந்தின் புது வீட்டின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

முதல்வருக்கு ஜனநாயகன் தானே முக்கியம்….! அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…. மக்களின் நிலையை கண்டு கொதித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…

4 minutes ago

லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…

25 minutes ago

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

1 மணத்தியாலம் ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

1 மணத்தியாலம் ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

1 மணத்தியாலம் ago

“ஏமாத்துரத்துக்கும் ஒரு அளவு வேண்டாமா?…” 2 கிலோ தங்கம்… 10 அடுக்குமாடி குடியிருப்பு… சந்தை மதிப்பு ரூ.150 கோடியா?… ஆனா சாதாரண எஞ்சினியர்… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை…!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி வரும் எஞ்சினியர் முத்யம் வெங்கட ரமணா, வருமானத்திற்கு…

1 மணத்தியாலம் ago