Categories: சினிமா

மொத்தம் 154 படங்களில் நடித்துள்ள விஜயகாந்த்.. கடைசியாக நடித்த படம் எது தெரியுமா..? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ..

Spread the love

1980 மற்றும் 1990களில் தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்சன் நாயகனாக கலக்கியவர் கேப்டன் விஜயகாந்த். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகில் கால் பதித்து தனது நடிப்பால் உச்சத்தை தொட்டவர். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் அதிரடியாக நுழைந்து, கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற இரண்டு மாபெரும் தலைவர்களுக்கு  எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டவர் . கடந்த சில வருடங்களாக இவர் உடல் நலமின்றி தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார் இதைத்தொடர்ந்து.

நேற்று இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். நடிகர் விஜயகாந்தின் மறைவால் தற்பொழுது ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீரில் மூழ்கி போய் உள்ளது.

சாலிகிராமத்தில் அவரது வீட்டிற்கு விஜயகாந்த் உடல் முதலில் கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து தேமுதிக கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், கவுண்டமணி, தியாகு, ரஜினிகாந்த், கமலஹாசன்  போன்ற பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுள்ளனர்.

புரட்சி கலைஞர் விஜயகாந்த் தனது திரைவாழ்க்கையில் 154 படங்களில் நடித்துள்ளார் . இப்படி பல ஹிட் படங்களை கொடுத்த இவர் கடைசியாக நடித்த திரைப்படம் எது தெரியுமா? அந்த படத்தின் பெயர் ‘தமிழன் என்று சொல் ‘என்பது தான். ஆனால் இத்திரைப்படம் பாதியிலேயே டிராப் ஆனது.  டிராப் ஆன அந்த படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“என் சாவுக்கு மோடிதான் காரணம்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தூக்கில் தொங்கிய அதிர்ச்சி சம்பவம்… உருக்கமான கடைசி ஆசை….!

தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், யெல்லாரெட்டிபேட் மண்டலத்தைச் சேர்ந்த ரச்சார்லா கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிட்லா வம்ஷி (25).…

2 minutes ago

“மதுரையை தூக்கிக் கொடுக்கணும்… கயல்விழி போட்ட கண்டிஷன்”… கடுப்பாகி கதவை மூடிய விஜய்… அழகிரி குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த CM…!

மேலதிகாரங்களின் புறக்கணிப்பால் திமுகவில் ஓரங்கட்டப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், தற்போது தங்களின் அரசியல் எதிர்காலத்திற்காக மாற்றுக்கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இந்தச்…

9 minutes ago

“வெயில் தாங்க முடியல… வாட்டர் அடிங்க…” போலீஸிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்…! போராட்டக் களத்தில் டான்ஸ் ஆடி… இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…

1 மணத்தியாலம் ago

முதல்வருக்கு ஜனநாயகன் தானே முக்கியம்….! அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…. மக்களின் நிலையை கண்டு கொதித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago

லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…

2 மணத்தியாலங்கள் ago

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

2 மணத்தியாலங்கள் ago