Connect with us

CINEMA

மொத்தம் 154 படங்களில் நடித்துள்ள விஜயகாந்த்.. கடைசியாக நடித்த படம் எது தெரியுமா..? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ..

1980 மற்றும் 1990களில் தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்சன் நாயகனாக கலக்கியவர் கேப்டன் விஜயகாந்த். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகில் கால் பதித்து தனது நடிப்பால் உச்சத்தை தொட்டவர். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் அதிரடியாக நுழைந்து, கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற இரண்டு மாபெரும் தலைவர்களுக்கு  எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டவர் . கடந்த சில வருடங்களாக இவர் உடல் நலமின்றி தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார் இதைத்தொடர்ந்து.

Kamal Haasan

   

நேற்று இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். நடிகர் விஜயகாந்தின் மறைவால் தற்பொழுது ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீரில் மூழ்கி போய் உள்ளது.

சாலிகிராமத்தில் அவரது வீட்டிற்கு விஜயகாந்த் உடல் முதலில் கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து தேமுதிக கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், கவுண்டமணி, தியாகு, ரஜினிகாந்த், கமலஹாசன்  போன்ற பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுள்ளனர்.

புரட்சி கலைஞர் விஜயகாந்த் தனது திரைவாழ்க்கையில் 154 படங்களில் நடித்துள்ளார் . இப்படி பல ஹிட் படங்களை கொடுத்த இவர் கடைசியாக நடித்த திரைப்படம் எது தெரியுமா? அந்த படத்தின் பெயர் ‘தமிழன் என்று சொல் ‘என்பது தான். ஆனால் இத்திரைப்படம் பாதியிலேயே டிராப் ஆனது.  டிராப் ஆன அந்த படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by RAAGA (@raaga.my)

Continue Reading

More in CINEMA

To Top