திக் திக்… ரூ 500 கடன் தர மாட்டியா?… முதியவரைக் கொன்று… வாயிலிருந்த தங்கப் பற்களை பிடுங்கி… சென்ற அண்டை வீட்டுப் பெண்… நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்…!!

By Swetha on கார்த்திகை 10, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 500 ரூபாய் கடன் தராத காரணத்திற்காக, 60 வயது முதியவரை அவரது அண்டை வீட்டுப் பெண் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. போபாலில் உள்ள ஷாஜஹானாபாத் பகுதியில் வசித்து வந்த கல்ரி தேவி என்ற முதியவரிடம், அண்டை வீட்டில் வசிக்கும் ரேகா (45) என்ற பெண் 500 ரூபாய் கடன் கேட்டுள்ளார். முதியவர் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ரேகா அவரைத் தாக்கி, மூக்கையும் வாயையும் பொத்தி மூச்சுத் திணறடித்துக் கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு, முதியவர் உடலில் அணிந்திருந்த தங்கத் தோடுகள், மூக்குத்தி, கொலுசு மற்றும் அவரது வாயில் இருந்த செயற்கை தங்கப் பற்கள் ஆகியவற்றை ரேகா திருடிக்கொண்டு தப்பியோடினார். இந்த கொடூரக் கொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் ரேகாவைத் தீவிர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளது. அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் பற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

   

கைது செய்யப்பட்ட ரேகாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவருக்கு ஏற்கனவே பல்வேறு குற்றப் பின்னணிகள் இருப்பது தெரியவந்துள்ளது. சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மற்றும் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்குகள் அவர் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ரேகா இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.