காப்பாத்துங்க… காப்பாத்துங்க… நகர்ந்த ரயிலில் சிக்கி… இழுத்துச் செல்லப்பட்ட பெண்… அலறல் சத்தத்தைக் கேட்டு பாய்ந்து மீட்ட RPF வீரர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Swetha on கார்த்திகை 10, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷன்கர் ரயில் நிலையத்தில், நகர்ந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் – உதய்பூர் ரயிலில் இருந்து பெண் பயணி ஒருவர் கீழே இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால், நடைமேடைக்கும் ரயிலின் படியேறிக் கதவுக்கும் இடையே மாட்டிக்கொண்டது. இதனால் நிலைதடுமாறிய அவர் நகரும் ரயிலுடன் சேர்ந்து பிளாட்பாரத்தில் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் நிரஞ்சன் லால், சற்றும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்து ஓடினார். அங்கு கூடியிருந்த பிற பொதுமக்களின் உதவியுடன், ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கியிருந்த அந்தப் பெண்ணை அவர் பத்திரமாக மீட்டெடுத்தார்.

   

https://twitter.com/nextminutenews7/status/2120056845696180731/video/1

   

இந்த விபத்தில் அந்தப் பெண்ணின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த நெஞ்சைப் பதறவைக்கும் ஒட்டுமொத்த சம்பவமும் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சமயோசிதமாகவும் மிக விரைவாகவும் செயல்பட்டு ஒரு பெரிய அசம்பாவிதத்தைத் தடுத்த காவலர் நிரஞ்சன் லாலின் தீரச்செயல் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது.