பாலியல் வன்கொடுமையா?… ரூ.3 கோடி கேட்டு ஆடை களைப்பு… பிரபல நடிகை விரித்த வலையில் சிக்கிய டாக்டர்?… கொச்சியில் நள்ளிரவு பகீர்…!!

By Gayathri on கார்த்திகை 10, 2026

Spread the love

கொச்சியைச் சேர்ந்த மருத்துவர் ஜான்சன் கே. வர்கீஸ் மீது 50 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நிலையில், அவர் எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி இன்ஃபோபார்க் பகுதி விடுதியில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள சூழலில், இக்குற்றச்சாட்டை மருத்துவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நீண்டகாலமாகத் தன்னிடம் சிகிச்சையில் இருந்த அப்பெண்ணுடன் நட்பு மட்டுமே இருந்ததாகவும், திட்டமிட்டுத் தன் மீது பொய்ப் புகார் புனையப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவர் தனது மனுவில் முன்வைத்துள்ள எதிர்க்குற்றச்சாட்டின்படி, கடவந்தரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு அவசர மருத்துவ சிகிச்சை என்ற போர்வையில் நடிகை அதுல்யா சந்திரன் தன்னை வரவழைத்ததாகத் தெரிவித்துள்ளார். அங்கு நடிகையுடன் இருந்த 12 பேர் கொண்ட கும்பல் தன்னைக் கட்டிவைத்து தாக்கி, ஆடைகளைக் களைந்து வீடியோ எடுத்ததாகவும், அதை வெளியிடாமல் இருக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். பணம் கொடுக்க மறுத்து சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றதாலேயே தன் மீது பழிவாங்கும் நோக்கில் பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டதாகவும், இதற்கான வாட்ஸ்அப் ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

   

இவ்வழக்கு தொடர்பாக நடிகை அதுல்யா சந்திரன் மற்றும் பிபின் பெரும்பள்ளி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள மருத்துவர் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு பெற முன்ஜாமீன் கோரியுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை புகார் மற்றும் ரூ.3 கோடி மிரட்டிப் பறிக்க முயன்ற புகார் ஆகிய இரண்டு கோணங்களிலும் காவல்துறையினர் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.