இளைஞனுக்கு அடித்த மெகா ஜாக்பாட்..! சுவரில் மறைக்கப்பட்டிருந்த மர்மப் பை… திறந்து பார்த்ததும் உறைந்துபோன போலீஸ்…!!

By Gayathri on ஆவணி 17, 2026

Spread the love

பெல்ஜியம் நாட்டின் சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மோன்டே நகரில் உள்ள 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பங்களா ஒன்றில் பாதாள சாக்கடை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கு விடுமுறை கால வேலைக்காக வந்திருந்த கோபி என்ற 18 வயது இளைஞர், வீட்டின் அடித்தளத்தில் ஒரு பை ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருப்பதை தற்செயலாகக் கண்டார். அதனைத் திறந்து பார்த்தபோது, உள்ளே சுமார் 98 கோடி ரூபாய் மதிப்பிலான அபூர்வ நாணயங்களும், தங்கக் கட்டிகளும் இருப்பதைக் கண்டு அவர் ஆச்சரியமடைந்தார்.

இந்தத் தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள், அந்தப் புதையலை மீட்டு ப்ரஸ்ஸல்ஸ் நகருக்குப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர். மீட்கப்பட்ட தங்கம் ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதா அல்லது திருடப்பட்டதா என்ற கோணத்தில் தற்போது தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பெல்ஜிய நாட்டுச் சட்ட விதிகளின்படி, இதன் உண்மையான உரிமையாளர் யார் எனத் தெரியாவிட்டால், ஐந்து ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகே புதையலைக் கண்டுபிடித்தவர்கள் அதனைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும். எனினும், சற்றும் எதிர்பாராமல் கிடைத்துள்ள இந்த மாபெரும் புதையல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.