கோரக்பூரைச் சேர்ந்த தம்பதிக்குத் திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், அவர்கள் அந்தமானுக்கு முதலிரவு கொண்டாட சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது, மனைவிக்கு எதிர்பாராதவிதமாக மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை மிதித்தும், கைகளாலும் சரமாரியாகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும், ஆத்திரம் அடங்காமல் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்யவும் முயன்றுள்ளார்.
அறையிலிருந்து வந்த அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த ஹோட்டல் ஊழியர்கள், உடனடியாகத் தலையிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றினர். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை 45 நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் மீது கோரக்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இயற்கை நிகழ்வான மாதவிடாய்க்காக மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய கணவனுக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
