“Kinmemai” என்பது ஜப்பானிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வகை பிரீமியம் அரிசி ஆகும். வழக்கமான அரிசியை விட இந்த அரிசியில் அதிக ஊட்டச்சத்து மற்றும் சுவை இருப்பதுடன், சமைப்பதற்கு முன் இதை கழுவ வேண்டியதில்லை. இதனால் நேரமும், தண்ணீரும் மிச்சமாகிறது. 1 கிலோ அரிசியின் விலை ரூ.15,000 ரூபாய்க்கு விற்கப்படுவதால், இது உலகின் விலையுயர்ந்த அரிசி என்ற கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது.
காப்புரிமை பெற்ற கின்மேமை செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த அரிசி, உணவு ஆர்வலர்கள் மற்றும் ஊட்டச்சத்து மீது கவனம் செலுத்துபவர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று, இது தீட்டப்படாதது.
