சினிமாவில் பின்னணி பாடகி மற்றும் நடிகையாக திகழ்ந்து வருபவர் ஆண்ட்ரியா. இவர் கவினுடன் மாஸ்க் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் ப்ரோமோஷன்காக கலந்து கொண்ட ஆண்ட்ரியாவிடம் விஜய்யின் அரசியல் குறித்து சில கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, விஜய் சினிமாவில் இருந்து வெளியேறுவது எனக்கு வருத்தமாக உள்ளது. அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று தான் கூறுவேன். அவருடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளேன் .அப்போது அவர் மிகப்பெரிய ஸ்டார். வளர்ந்து வரும் நடிகர் எல்லாம் இல்லை.
ஆனாலும் எந்த பந்தாலும் இல்லாமல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு மிக எளிமையாக அனைவரையும் அணுகும் அளவிற்கு இருப்பார். மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் போது என்னிடம் அவர் அரசியலில் ஆர்வம் உள்ளதா? என்று கேட்டார். நான் இல்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர் அரசியலில் களமிறங்குவார் என்று நான் அப்போது நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் விஜய் பிரச்சாரத்திற்கு உங்களை அழைத்தால் போவீர்களா? என்ற கேள்விக்கு ஐயையோ நான் போகவே மாட்டேன். அதை மாஸ்டர் படத்தில் படப்பிடிப்பிலேயே அவரிடம் சொல்லிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
