கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தவெக் தலைவர் விஜய், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் உள்ளரங்கில் மக்களை சந்தித்து வருகிறார். இதில், விவசாயிகள், நெசவாளர்கள் என 2,000 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றி வருகிறார். அதில், திமுகவினருக்கு தவெகவினர் மீது தனிப்பட்ட வன்மம் இருக்கலாம், ஆனால் நமக்கு திமுக மீது வன்மம் கிடையாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
‘உங்களையும், நம்மையும் பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது திமுக. ஆட்சிக்கு வந்த பிறகு திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. நீட்டை ஒழிப்பேன் என கதை எல்லாம் விட்டவர்கள் எங்களை பார்த்து கொள்கை இல்லை’ என கூறுகிறார்கள். கொள்கையே இல்லாத கட்சியை நடத்தும் முதலமைச்சர் தவெகவிற்கு கொள்கை இல்லை. தவெகவினர் தற்குறிகள் அல்ல. தமிழ்நாடு அரசியலில் ஆச்சர்யக்குறி. அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி என்று கூறியுள்ளார்.
