2026 தேர்தல் கூட்டணி… சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 23, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சியில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என்றும் கேப்டன் இருக்கும்போது அவர் செய்த உதவியும் நல்ல மனதையும் யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நான்கு கட்ட பயணம் முடிவடையும் போது தேர்தலுக்கு முன் அனைத்து தொகுதிகளுக்கும் சென்ற ஒரே கட்சியாக தேமுதிகவாக தான் இருக்கும்.

எத்தனையோ தோல்விகள், எத்தனையோ வெற்றிகள், எத்தனையோ துரோகங்களை கடந்து தொண்டர்களின் ஆதரவோடு மகத்தான கழகமாக தேமுதிக இருக்கின்றது. 2026 தேர்தல் வரும் போது மீண்டும் வெற்றி கூட்டணியுடன் வெற்றி வேட்பாளருடன் மக்களை சந்திப்பேன். இந்த தேர்தலில் நீங்கள் எல்லோரும் விரும்பும் கட்சியில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். 2026 தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமைய அனைவரும் ஜனவரி 9 மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.