ரூ.4,730 கோடி மணல் கொள்ளை… பரபரப்பு குற்றசாட்டை வைத்த TVK விஜய்…!

By Soundarya on கார்த்திகை 23, 2025

Spread the love

கரூர் துயர சம்பவம் நடந்து 55 நாட்களுக்கு பிறகு தவெக தலைவர் விஜய், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் உள்ளரங்கில் மக்களை சந்தித்து வருகிறார். இதில், விவசாயிகள், நெசவாளர்கள் என 2,000 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றி வருகிறார். அதில், பலாற்றில் மணல் கடத்தல் மூலம் ரூ.4,730 கோடி அளவுக்கு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதி விவசாயிகளைப் போல நெசவாளர்களையும் திமுக அரசு கைவிட்டு விட்டது. நெசவாளர்களுக்கு ஒருநாள் சம்பளம் ரூ.500 மட்டும்தான். அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. 60 வருடம் பழமையான ஒரு பேருந்து நிலையத்தை கூட இந்த திமுக அரசால் புதுப்பித்து கட்ட முடியவில்லை” எஎன்று தெரிவித்தார்.