பொங்கல் பரிசு ரூ.3000 வழங்குவதில் திடீர் மாற்றம்… தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பரந்த உத்தரவு… அரசு புதிய அறிவிப்பு…!

By Nanthini on தை 6, 2026

Spread the love

தமிழக அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் அலுவலகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், அனைத்து அரிசி பெரும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கக்கூடிய குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்புடன் ரொக்க தொகையாக மூவாயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த அரசு வழங்கும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

அதன்படி 1500 ரூபாய்க்கு மேல் மற்றும் 2000 குடும்ப அட்டைகளுக்கு மேல் இணைக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகளில் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரேஷன் கடைக்கு அதிக அளவில் மக்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் முதல் நாள் பிற்பகல் 100 பேருக்கும், முற்பகல் 100 பேருக்கும், இரண்டாம் நாள் முதல் நாள் ஒன்றுக்கு 300 பேருக்கும் என வழங்க வேண்டும். டோக்கன்கள் வீடு தேடிச்சென்று ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். தெருவாரியாக விநியோகம் செய்யப்படும் விவரம் கடைகளில் முன்பாக காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

   

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் விநியோகம் செய்ய ஏதுவாக 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும். அதனை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 7 ஆம் தேதி விடுமுறை வழங்கப்படும். சட்டம் ஒழுங்கு ஏற்படக்கூடிய ரேஷன் கடைகளில் போதிய போலீஸ் பாதுகாப்பு கேட்டு பெற வேண்டும். பொதுமக்கள் 1967 மற்றும் 1800-425-5901 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை ரேஷன் கடைகளின் விற்பனை முனையை எந்திரத்தில் விரல் ரேகை சரிபார்ப்பு மூலமாக மேற்கொள்ள வேண்டும்.

   

ஒருவேளை தொழில்நுட்ப காரணங்களால் கைரேகை சரிபார்ப்பு பணி சரிவர மேற்கொள்ளப்பட இயலாத நேரங்களில் அதற்கு உரிய பதிவேட்டில் உரிய கையெழுத்து பெற்று வழங்க வேண்டும். பொங்கல் ரொக்க தொகை 3000 ரூபாய் வழங்கும் போது ரேஷன் கடை பணியாளர்கள் ரூபாய் நோட்டுகளை கவர்களில் மறைமுகமாக வழங்கக்கூடாது. பயனாளிகளின் முன்பே நோட்டுக்களை எண்ணி பயனாளிகளின் கைகளிலேயே வழங்க வேண்டும். பொங்கல் பரிசு மற்றும் ரொக்க தொகை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.