கள்ளக்குறிச்சியில் ஜனவரி 5 அன்று நடைபெற்ற அதிமுக மகளிர் அணி பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முக்கிய தேர்தல் வாக்குறுதி ஒன்றை அளித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் செல்லும் பட்டியலின (SC/ST) தம்பதிகளுக்கு அரசு சார்பில் இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
புதுமணத் தம்பதிகளுக்கு இலவசமாக பட்டு வேட்டி மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் வழங்கப்பட்ட ‘தாலிக்கு தங்கம்’ மற்றும் திருமண நிதியுதவி போன்ற திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
