தமிழக அரசியலில் புதிய திருப்பம்… ஒரே நேரத்தில் அதிமுகவில் இணைந்த 2 புதிய கட்சிகள்… குஷியான எடப்பாடி….!

By Nanthini on தை 6, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் கூட்டணி கணக்குகள் தற்போது சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தங்களுடைய ஆதரவை மீண்டும் உறுதி செய்து வருகின்றன. அதன்படி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் வருகின்ற தேர்தலை அதிமுக தலைமையில் சந்திக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேபோல அதிமுக கூட்டணியில் நீடிப்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் எழுந்து வந்த நிலையில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜகன் மூர்த்தி தன்னுடைய நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளார்.

முன்னதாக பொதுக்குழுவுக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்த நிலையில் கூட்டணி மாற்றம் குறித்த பேச்சுக்கள் ஏற்பட்டது.. ஆனால் தற்போது அதிமுக கூட்டணியில் தொடர்வதை உறுதி செய்துள்ள அவர் தங்களுடைய கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பே முதல் நடவடிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதனால் தற்போது அதிமுக கூட்டணியில் புதிய இரண்டு கட்சிகள் இணைந்துள்ளது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.