ஈராக்கில் திடீர் ட்ரோன் தாக்குதல்… பதறும் அமெரிக்கா… “கடைசியாகப் இருக்கும்னு நினைக்கல…” இளம் அதிகாரி பரிதாப பலி…மனைவியின் கண்ணீர் பதிவு…!

By Visaka on ஆடி 22, 2026

Spread the love

ஈராக்கில் உள்ள எர்பில் விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஈரானிய ட்ரோன் தாக்குதலில், வட கரோலினாவின் ஃபேட்டேவில் (Fayetteville) பகுதியைச் சேர்ந்த அமெரிக்க ராணுவ சார்ஜென்ட் மைக்கேல் இமானுவெல் ஸ்வின்டன் (30) பலியானார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உயிரிழந்த வீரரின் உடல் அடையாளம் காணப்பட்டு, அமெரிக்க அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு பாதுகாப்புத் தொடர்பான திடீர் எச்சரிக்கையையும் அமெரிக்கா விடுத்துள்ளது.

கணவரின் எதிர்பாராத மறைவால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மியா கோன்சலஸ்-ஸ்வின்டன், தனது கணவர் பணிக்குச் செல்லும் முன் ராணுவச் சீருடையில் குழந்தையைக் கையில் ஏந்தியிருக்கும் புகைப்படத்தைப் பேஸ்புக்கில் பகிர்ந்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். “உங்களை நான் கடைசியாகப் பார்க்கும் தருணம் இதுவாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தத் துயரச் செய்தியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்து வருகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ள உருக்கமான வரிகள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.