பெட்ரூமில் ரகசிய கேமரா…! “நண்பர்களிடம் பர்சனல் போட்டோக்கள் காட்டுவார்…” கணவரின் கொடூர சித்ரவதையை வெளிச்சம் போட்டு காட்டிய சின்னத்திரை நடிகை…!!

By Devi Ramu on ஆடி 22, 2026

Spread the love

பிரபல சின்னத்திரை நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை மோனிஷா, தனக்குத் திருமண வாழ்க்கையில் நேர்ந்த கொடூரச் சம்பவங்கள் குறித்துத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தன் மீது வீண் சந்தேகம் கொண்ட கணவர், தன்னை அடித்துச் சித்ரவதை செய்ததாகவும், படுக்கையறையில் தூங்குவது மற்றும் ஆடை மாற்றுவதை ரகசியமாகக் கேமரா மூலம் படம்பிடித்துத் தனது நண்பர்களுக்குக் காட்டி வக்கிரமாக நடந்துகொண்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், தான் சம்பாதித்த பணத்தை தவறான வழிகளில் செலவழித்து கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கணவரின் எல்லைமீறிய கொடுமைகளால் சகிப்புத்தன்மை இழந்த மோனிஷா, இறுதியில் விவாகரத்து கோரியுள்ளார். அப்போது தனது 100 சவரனுக்கும் அதிகமான நகைகளைத் தந்தால் மட்டுமே விவாகரத்து தருவேன் என கணவர் நிபந்தனை விதித்ததால், வேறு வழியின்றி அனைத்து நகைகளையும் அவரிடமே இழப்பீடாகக் கொடுத்துவிட்டுப் பிரிந்துள்ளார். நீதிமன்றத்தில் விவாகரத்து ஆவணத்தில் கையெழுத்திடும் போது நரக வேதனையிலிருந்து விடுதலை கிடைத்த சந்தோஷத்தில் தான் துள்ளிக்குதித்ததாகக் கூறிய மோனிஷாவிற்கு, ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் ஆறுதல் கூறி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.