மக்களே உஷார்…! 27 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!!

By Soundarya on ஆவணி 10, 2025

Spread the love

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, விழுப்புரம், கடலூரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் இன்னல்களை சந்தித்துள்ளார்கள். மதுரை, தஞ்சை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்னும் ஒரு வாரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

இந்நிலையில் இன்று இரவு 9 மணி வரை சென்னை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், தருமபுரி, கடலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.