ரஜினியை இரட்டை இலைக்கு ஓட்டு போட வைத்ததே கருணாநிதி… புதிய புயலை கிளப்பிவிட்ட திருமாவளவன்…!

By Srimathi on ஆவணி 10, 2025

Spread the love

அரூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் பேசிய அவர், தமிழ்நாட்டு அரசியலில் அனைத்து வலிகளையும் தாங்கிக் கொள்ளும் ஒரே கட்சி வி.சி.க. இன்று 4 எம்.எல்.ஏ, 2 எம்.பிகளைக் கொண்டு அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக திகழ்கிறோம். தலித் அமைப்புகள் எத்தனையாக இருந்தாலும், அதில் அங்கீகாரம் பெற்ற கட்சி வி.சி.க தான்.

வருடம் தோறும் எனது பிறந்தநாளில்(ஆகஸ்ட் 17) ஒரு கருப்பொருளை முன்னிறுத்தி கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு “மதச்சார்பின்மையை காப்போம்” என்பதை அடிப்படையாக வைத்து நிகழ்ச்சியை கொண்டாடுவோம். அம்பேத்கர் பிறந்த நாளை, பாஜக கொண்டாடுகிறது. ஆனால் அவரின் கொள்கையை பாஜக பின்பற்றவில்லை. மதம் மக்களுக்கானது, அரசுக்கானது அல்ல என்பதை வலியுறுத்துபவர் அம்பேத்கர். அதனை நேரு மற்றும் காந்தி ஆதரித்ததால் தான், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். நான் தேர்தலில் ஒரு சீட்டு இரண்டு சீட்டுகளாக திமுகவை ஆதரித்து வருவதாக சிலர் கூறுகிறார்கள். அதை வி.சி.க வினர் பெரிது படுத்தக் கூடாது. மதச்சார்பின்மையை ஆதரிக்கும் கட்சியான  திமுக தலைமையின்  கூட்டணிக்கு பெயரே “மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி”. இதனால்தான் விசிக திமுகவோடு கைகோர்க்கிறது.

   

ஒரு காலத்தில் கருணாநிதியை எதிர்காதவர்கள் எவரும் இல்லை. ரஜினிகாந்த் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்த இப்பொழுது வந்த தேர்தலில், ரஜினிகாந்த் வாக்களிக்கும் போது அவர் பின்னால் ஒருவரும் நின்று போட்டோ பிடித்து டிவியில் வெளியிட்டார். அதில் அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விட்டு, பின் ஊடகங்களை சந்திக்கும் பொழுது இரண்டு விரலை செய்கையாக காட்டி, தன் ரசிகர்களையும் இரட்டை இலைக்கே ஓட்டு போடுமாறு சூசகமாக கூறினார். ஆனால் அதை கருணாநிதி பெரிது படுத்தாமல், அடுத்த நாளே ரஜினிகாந்துடன் அமர்ந்து திரைப்படம் பார்த்தார். அதுதான் அரசியல் சகிப்புத்தன்மை. இந்த ஆளுமை திறனை வி.சி.க.வினர் கற்றுக்கொள்ள வேண்டும்.

   

சமீப காலத்தில் நான் எம்ஜிஆர் குறித்து பேசியா கருத்துக்கு காரணம் திமுக. ஏனெனில் அதற்கு சரியான எதிர்க்கட்சி அதிமுக. எனினும் அதில் நான் எம்ஜிஆரை ஒப்பிட்டு தான் பேசினேன், அவரை விமர்சித்து பேசும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை.