நடிகர் சூர்யா நடத்திய அகரம் பவுண்டேஷன் விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன், சர்வாதிகாரத்தையும், சனாதனத்தையும் வேறறுக்க வேண்டுமென்றால் அது கல்வியால் மட்டும் தான் முடியும் என்று பேசியது தற்போது சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சனாதனத்துக்கு எதிராக பேசிய நடிகர் கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என துணை நடிகர் ரவிச்சந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரமானது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவரும், ஓய்வு பெற்ற ஐஜியுமான மவுரியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
