ஐயோ… என்னடா இது புதுசா இருக்கு… மனித வாழ்க்கைக்கு குட்பை சொல்லி… நாயாக மாறிய நபர்… ரூ 22 லட்சம் செலவில் நடந்த விசித்திர மாற்றம்… அதிர்ச்சியில் நெட்டிசென்கள்…!

Spread the love

ஜப்பானைச் சேர்ந்த ‘டோகோ’ என்ற நபர், சிறுவயது முதல் ஒரு நாயாக வாழ வேண்டும் என்ற தனது வித்தியாசமான கனவை நனவாக்கியுள்ளார். இதற்காக அவர் என்ற பிரபல திரைப்பட சிறப்பு விளைவுகள் நிறுவனத்தை அணுகி, ‘ரஃப் கோலி’ என்ற நாய் இனத்தைப் போன்று தத்ரூபமாக இருக்கும் உடடையை வடிவமைத்துள்ளார். சுமார் 2 மில்லியன் யென் செலவில் 40 நாட்களில் உருவாக்கப்பட்ட இந்த ஆடையில், அவர் அசல் நாயைப் போலவே தோற்றமளிக்கிறார்.

தனது உருவ மாற்றத்தை வீடியோவாகப் பதிவு செய்து ‘I want to be an animal’ என்ற யூடியூப் பக்கத்தில் அவர் பகிர்ந்து வருகிறார். இந்த உடையில் அவர் வீதிகளில் உலா வருவது, பூங்காவில் மனிதர்கள் மற்றும் பிற செல்லப் பிராணிகளுடன் பாய்ந்து விளையாடுவது, நாயைப் போல உருண்டு பிரள்வது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அவரது இந்த விசித்திரமான செயல்பாட்டைக் கண்டு பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினர்.

சமூகத்தின் விமர்சனங்களுக்கும் நண்பர்களின் கேலிகளுக்கும் பயந்து தனது உண்மையான முகத்தையும் அடையாளத்தையும் மறைத்து வைத்திருக்கும் டோகோ, மனிதராக வாழ்வதை விட விலங்காக மாறுவதையே அதிகம் விரும்புவதாகக் கூறியுள்ளார். தனது கனவை நிறைவேற்ற இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டு, நாய் உடையில் வாழும் இவரது இந்த மாற்றம் சமூக வலைத்தளங்களில் மனித உளவியல் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் குறித்த பல புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.

Swetha

Recent Posts

மக்களே உஷார்… ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா?… நாளைக்குள் இதை செய்யலைனா ரேஷன் பொருட்கள் கிடைக்காதா?… அரசின் அதிரடி எச்சரிக்கை…!

கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் பயோமெட்ரிக் பதிவு செய்வதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. மாவட்டத்தில்…

16 minutes ago

ஐயோ… “யார் அந்த எட்டப்பர்கள்?”…. முதல்வர் விஜய் கூட்டத்தைப் புறக்கணித்து… கனிமொழி எம்பி கிளப்பிய புயல்… அரசியலில் பரபரப்பு…!

சென்னையில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது.…

23 minutes ago

ஷாக்… தவெகவில் இணைந்த மாஜி அமைச்சர்களுக்கு… பவர்ஃபுல் பொறுப்பு… முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு…!

அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர்…

34 minutes ago

ஐயோ ரத்தம்..! கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்…சென்ட்ரல் சிசிடிவியில் சிக்கிய கொலையாளிகள்… நடுங்க வைக்கும் பரபரப்பு வீடியோ…!!

சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கிப் பயணித்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சிவப்பு நிறப் பெட்டியொன்றிலிருந்து ரத்தம் கசிவதையும், துர்நாற்றம் வீசுவதையும்…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… சுதந்திர தின ஒத்திகையில் கொடூரம்… 2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… கொதித்தெழுந்த நெட்டிசென்கள்…!

கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சிகள் முடிந்து மாணவர்கள் வீடு…

1 மணத்தியாலம் ago