காரில் வந்த ஒருவர் விலை கொடுத்து வாங்கிய பறவைகளை காற்றில் பறக்கவிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
காட்டில் சுதந்திரமாக சுற்றி தெரியும் பறவைகளை அழகுக்காக நாம் கூண்டுக்குள் வைத்து வளர்க்கிறோம். அதிலும் சில பறவைகள் அழகுக்காக வேண்டி அதிகம் வேட்டையாடப்படுகின்றது. அவ்வாறு காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு வரும் பறவைகள் கூண்டுக்குள் வைத்து வளர்க்கப்பட்டு பின்னர், அவை விற்பனைக்கு வெளியில் வருகின்றன.
சிலர் பறவைகள் மீதுள்ள பாசத்தால், அன்பால் அவற்றை வாங்கி அவற்றுடன் விளையாடுவதும் கொஞ்சுவதும் அவற்றை வீட்டிற்கு கொண்டு சென்று கூண்டுக்குள் வைத்து வளர்ப்பதும் என மகிழ்ச்சியுடன் உள்ளனர். ஆனால் பறவைகளுக்கு சுதந்திரமாக சுற்றித் திரிவதே பிடிக்கும்.
தற்பொழுது இங்கு ஒரு நபர் பறவைகளைப் பிடித்து கூண்டிற்குள் அடைத்து விற்பனைக்கு கொண்டு வருகிறார். சாலையில் காரில் வந்த ஒருவர் அப்பறவைகளை அவரிடம் இருந்து ஒவ்வொன்றாக காசு கொடுத்து வாங்கி காற்றில் பறக்க விடும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதை பார்த்த நெட்டிசன்கள் ‘கடவுள் உருவத்தில் மனிதர்’ என்றும், ‘மனிதநேயமிக்க மனிதர்’ என்றும், ‘இது போன்ற எண்ணம் தான் மனிதநேயம்’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ உங்களுக்காக….
https://www.youtube.com/watch?v=0JDAStwoo9E