என்ன ஜெயிக்க அவரால மட்டுமே முடியும்… 90 களில் ரஜினி சொன்ன அந்த நடிகர் யாரு தெரியுமா?

By vinoth on ஏப்ரல் 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

80 களில் ரஜினி சூப்பர் ஸ்டாராக வளர்ந்த காலகட்டத்தில் அவருக்கு போட்டியாளராக கமல்ஹாசன் இருந்தார். அதன் பின்னர் மோகனின் சில படங்களும் ரஜினி படத்தின் வசூலுக்கு போட்டியாக அமைந்தன. அதன் பின்னர் டி ராஜேந்தர், விஜயகாந்த் போன்றவர்களும் 80 களில் ரஜினிக்கு போட்டியாளராக இருந்தனர்.

   

அதே போல 90 களில் ராஜ்கிரண், கமல் போன்றவர்களும், 2000 களில் விக்ரம் போன்றவர்களும் ரஜினி படத்துக்கு நிகராக வசூலைக் கொடுத்தனர். இப்போது விஜய், அஜித் போன்றவர்கள் ரஜினி பட வசூலுக்கு இணையான வசூலைக் கொடுத்து வருகின்றனர். ஆனால் எல்லா காலத்திலும் யார் அதிக வசூல் கொடுத்தாலும் அவர்களை ரஜினிக்கு போட்டியாளர் என சொல்லும் அளவுக்கு ரஜினி அந்த இடத்தில் நிரந்தரமாக இருந்துள்ளார்.

   

இந்நிலையில்தான் ரஜினிகாந்த் ஒருமுறை தன்னுடைய படங்களின் வசூலை யாரால் முறியடிக்க முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “எனது படத்தின் வசூலை முறியடிக்க விஜயகாந்தால் மட்டுமே முடியும்” எனக் கூறியுள்ளார் ரஜினி. ரஜினி அப்படி சொல்லக் காரணம் தனக்கு இணையாக பி மற்றும் சி சென்டர் என சொல்லப்படும் கிராமப்புறங்களில் ரஜினிக்கு இணையான வளர்ச்சியையும் ரசிகர் மன்றங்களையும் விஜயகாந்த் உருவாக்கி வைத்திருந்தார்.

 

ரஜினி சொன்னது போலவே பல நேரங்களில் ரஜினி விஜயகாந்த் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகியுள்ளன. அதில் பெரும்பாலான முறை விஜயகாந்த் படம் ரஜினி படத்துக்கு இணையாகவே அல்லது அதிகமாகவோ வசூலைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.