YouTube மூலம் கல்லா கட்டும்  CWC மணிமேகலை … ஒரு மாசத்துக்கு மட்டும் இவ்ளோவா..? 

By Begam on ஏப்ரல் 26, 2024

Spread the love

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே மணிமேகலை. சமீபத்தில் நான்காவது சீசன் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இவர் விலகினார். அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இவரின் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஒருபுறம் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி வந்தனர்.

   

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தங்களின் சொந்த நிலத்தில் வீடு கட்டும் வேலையில் மணிமேகலையும் அவரின் கணவரும் பிசியாக உள்ளனர்.  இவர் டான்சர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில் அதை மீறி தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  இருவரும் தங்களது வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.

   

 

இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அவ்வப்பொழுது எதாவது செய்து அதனை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் மட்டுமின்றி இவர்  யூடியூப் மூலமும் சம்பாதித்து வருகிறார். அவரின் வீடியோக்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல ரீச் கிடைக்கும். தற்பொழுது  இவரது யூடுயூப் வருமானம் குறித்த தகவல்கள் தான் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு மாதத்திற்கு ரூ.59,000 இவருக்கு வருகிறதாம்.