நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு இப்படி ஒரு காதல் கதை இருந்ததா? நம்பவே முடியலையே!

By Arun

Published on:

இந்திய சுதந்திரத்திற்கான விடுதலைப் போரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்கு அளப்பறியது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம்தான் தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய ராணுவத்திற்கு ஒரு முன்னோடி என்று  கூட சொல்லலாம்.

பிரிட்டிஷாரை எதிர்க்க ஜப்பானுடன் கூட்டணி வைத்தார் நேதாஜி. தனது இந்திய தேசிய இராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீரர்களை வான்படை தாக்குதல் பயிற்சிக்காக ஜப்பானின் டோக்கியாவில் அமைந்திருந்த இம்பீரியல் மிலிட்டரி அகாடமிக்கு அனுப்பி வைத்தார். இவர்களை டோக்கியோ கேடட்ஸ் என்று அழைத்தனர்.

   

ராணுவப் பயிற்சி பெற்ற நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் பிரிட்டிஷ் ராணுவத்துடன் போரில் ஈடுபட்டது. ஆனால் எதிர்பாராவிதமாக ஜப்பான் போரில் சரணடைந்த செய்தி வந்தது. இதனை தொடர்ந்து நேதாஜியை பத்திரமாக மஞ்சூரி என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு கொடுப்பதாக ஜப்பான் கூறியிருந்தது. அதன்படி 1945 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 17 ஆம் தேதி பாங்காக்கிற்குச் சென்ற நேதாஜி, அங்கிருந்து சைகோனுக்குச் சென்றார்.

அங்கிருந்து நேதாஜியை போர் விமானம் ஒன்றில் ஏற்றிச்சென்றனர் ஜப்பானியர்கள். துர்திஷ்டவசமாக நேதாஜி பயணித்த விமானம் ஃபார்மோசா என்ற தீவுகளுக்கு நடுவில் விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் நேதாஜி உயிரிழந்தார். எனினும் இன்னமும் இந்திய மக்கள் நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்றே நம்பி வருகின்றனர். ஆனால் அவரின் அஸ்தி, ஜப்பானின் டோக்கியோ நகரில் அமைந்துள்ள ரங்கோஜி ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஒரு ஒப்பற்ற வீரராக திகழ்ந்த நேதாஜிக்கு ஒரு காதலும் இருந்திருக்கிறது. அதாவது நேதாஜி தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக எழுத விரும்பினார். அந்த பணிக்காக சுருக்கெழுத்து பயின்ற எமிலி என்ற ஒரு பெண்ணை பணிக்கு அமர்த்தியிருந்தார். இருவரும் மிகவும் நெருங்கிப் பழகி வர ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. 1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி நேதாஜியும் எமிலியும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறுகின்றனர். இவர்களுக்கு அனிதா போஸ் என்ற மகளும் இருக்கிறாராம்.

author avatar