அவசர பேச்சுவார்த்தை… தவெகவில் இணையும் ஓபிஎஸ் அணியின் முக்கிய புள்ளி… ஆட்டத்தை ஆரம்பித்த செங்கோட்டையன்…!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பும் விதமாக சில நாட்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புதிய கட்சியான தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட இவர் மிகப்பெரிய திராவிட கட்சி ஆன அதிமுகவை பகைத்துக் கொண்டு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தோன்றிய கட்சியை இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்த காரணத்தால் என்னைப் போன்ற மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைப்பது பணிகளை மேற்கொள்வோம் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார்.

இதனால் அவர் தனி கட்சி தொடங்குவார் அல்லது ஓபிஎஸ் போல ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு நேர் மாறாக விஜயின் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைந்து அங்கு அதிமுக ஒருங்கிணைப்பை மேற்கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் செங்கோட்டையன் கூறியது போல ஒருங்கிணைப்பு பணியை ஆரம்பித்து விட்டார். கோபிசெட்டிபாளையத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் எம்எல்ஏவான செங்கோட்டையன், தமிழகம் முழுவதும் அறிந்த அரசியல் தலைவர்களின் ஒருவர் ஆவார். அந்த அளவிற்கு கொங்கு மண்டலத்தில் தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்தியுள்ளார்.

இதனிடையே மாற்றுக் கட்சியினரை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைத்துவரும் செங்கோட்டையன் அனுபவமிக்க பல முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவார்கள் என்று சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதன்படி தற்போது ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பதிலளித்த வெல்லமண்டி நடராஜன், வரும் டிசம்பர் 15ஆம் தேதி ஓபிஎஸ் முக்கிய முடிவை எடுக்க இருப்பதால் அதுவரை பொறுத்திருக்குமாறு செங்கோட்டையனிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

அது என் சம்பந்தி பேக்டரி… என் சகலையோட மில்… குடும்பத்துக்குள்ள சண்டையை மூட்டாதீங்க… செங்கோட்டையனுக்கு எடப்பாடி பழனிசாமி காரசார பதிலடி..!!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன் மீது சுமத்திய ரூ.50 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு புகாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

2 minutes ago

“வேட்பாளர் அவுட்.. ஆனா ஆட்டம் இருக்கு”… எடப்பாடியில் திடீர் திருப்பம்…. விஜய்யின் தவெக எடுத்த அந்த ஒரு முடிவு… ஆடிப்போன அரசியல் களம்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும்…

4 minutes ago

“என் ஆசை நிறைவேறல..” ஆனால் விடமாட்டேன்… கோவையில் பிரதமர் மோடி உருக்கம்..!!

கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் இட ஒதுக்கீடு…

8 minutes ago

“நடுக்கடலில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு…. ஈரானுக்கு இந்தியா கொடுத்த மரண அடி வார்னிங்… டெல்லியில் தூதரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு தகவல்….!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்…

9 minutes ago

ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… ₹74,000 வரை சம்பளம்… பவர் கிரிட் நிறுவனத்தில் 660 பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவின் முன்னணி மின்பகிர்மான நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (POWERGRID), தற்போது 660 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய…

9 minutes ago

ஈரான் கடலில் பதற்றம்… இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு?… நடுக்கடலில் ‘யூ-டர்ன்’ போட்ட 4 கப்பல்கள்…. என்ன நடந்தது…?

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள்…

12 minutes ago